கரூர் திண்டுக்கல் சாலை - PAVB வித்யா பவன் பள்ளி குழந்தைகள் தின விழா

கரூர் திண்டுக்கல் சாலை - PAVB வித்யா பவன் பள்ளி குழந்தைகள் தின விழா 

கரூர் திண்டுக்கல் சாலையில் இருக்கக் கூடிய PAVB வித்யா பவன் என்ற பள்ளியின் நிகழ்வில் கலந்து கொண்டேன்.









 திரு.அம்மையப்பர் என்பவர் முன்னாள் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின் இந்தப் பள்ளியினை ஆரம்பித்து உள்ளார்கள்.


உள்ளே சென்றவுடன் வரவேற்பில் முளைப்பாரி வைத்து வரவேற்றனர். பாரம்பரிய விழா மற்றும் குழந்தைகள் தின விழா இன்று அவர்கள் கொண்டாடினார்கள். பின்னர் பாரம்பரிய கால்நடைகள் நாய் கோழி மாடு போன்றவற்றை குழந்தைகளின் பார்வைகளுக்கு கண்காட்சி படுத்தி இருந்தார்கள். இதன் மூலம் கால்நடை அதனால் ஏற்படும் வாழ்வாதாரம் போன்ற வற்றைக் குறித்து ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தி இருந்தார்கள்.


பள்ளியின் தாளாளர் 650 மரங்கள் நட்டு ஒரு சோலையின் நடுவில் அப்பள்ளியினை உருவாக்கி உள்ளார்கள். மேடைக்குச் சென்று மேடையில் அமர்ந்தது முதல் பல ஆச்சரியங்கள் காத்து இருந்தன. விழா ஆரம்பித்தது முதல் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் உபயோகிக்காமல் தூய தமிழில் மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் தாளாளரும் பேசியதில் பெரும் பிரமிப்பையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதே போன்று இந்த விழாவின



அதே போன்று இந்த விழாவினை ஒருங்கிணைப்பாளர்களான பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் திரு. குமரேஷ் அவர்களின் பணியும் குறிப்பிடத்தக்கது. அந்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் அத்துணை ஆர்வமாக இன்று விழாவினை முன்னின்று நடத்தினார்கள்.
இந்த மாணவர்களிடம் சுற்றுச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும், மேற்கு தொடர்ச்சி மலை, தென் இந்தியாவில் இருக்கும் ஆறுகளும், சுற்றுச் சூழல் பற்றி, நீர் ஆதாரங்கள் பற்றி, தமிழர்களின் பாரம்பரியம், சமீப காலகட்ட நிலை குறித்தும் உரையாற்றி அமர்ந்தேன்.

மறுபடியும் மாணவர்களின் விழாவில் மாணவிகள் பேசிய சொற்பொழிவு வியக்கச் செய்தது. கையில் எந்தக் காகிதமும் இல்லாமல் எழுதி வைத்துப் பேசாமல் சரளமாக அவர்கள் உலகம் பொருளாதாரம் இலக்கியம் போன்றவற்றை பற்றிப் பேசும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

கரூர் நகரத்தில் நாம் கிராமப்புறங்களில் 8 கிலோமீட்டர் தூரத்தில் இப்படி ஓர் அருமையான பள்ளிக்கூடம் நடத்திவரும் நிர்வாகத்திற்கு, தாளாளர் முதல் ஒவ்வொரு தனி நபருக்கும் முன்னாள் மாணவர் சங்கத்தினராகும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கின்றேன்.

- கார்த்திகேய சிவசேனாபதி

Comments