நம் பாரம்பரிய நெல் ரகங்கள் பகுதி-1 நெல்லின் தொடக்கம் இயற்கை விவசாயம்

நம் பாரம்பரிய நெல் ரகங்கள் பகுதி-1  நெல்லின் தொடக்கம் இயற்கை விவசாயம் 

நம் பாரம்பரிய நெல் ரகங்கள்
____________

பகுதி-1

நெல்லின் தொடக்கம்

பல்லாயிரம் ஆண்டுகளாக நெல் பயிர் சாகுபடி நமது முன்னோர்கள் செய்து வந்ததாக பல சான்றுகள் கூறுகின்றன. 

தன்மை

உள்ளூர் சூழல், நில அமைப்பு, காற்று, வறட்சி, பனிப்பொழிவு, வெள்ள பாதிப்பு மற்றும் பல இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன. 

உழவர்களே விஞ்ஞானிகள்

காலம் காலத்துக்கும் இந்திய உழவர்களே விஞ்ஞானிகளாக இருந்து நிலத்துக்கும் பருவத்துக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களைக் கண்டு வைத்திருக்கிறார்கள்.

விதையே ஆயுதம்

ஆனால் இன்றோ நம்மிடம் மிஞ்சி இருப்பது சில ரகங்கள் ஏனைய ரகங்கள் நவீன வேளாண் புரட்சியின் மோகத்தால் அழிந்துவிட்டன. இருப்பதையாவது நாம் மீட்டெக்க வேண்டும்.

வளர்ந்து விளையும் வரப்புக் குடைஞ்சான், வறட்சி தாங்கி விளையும் வாடஞ்சம்பா, உடல் உழைப்புக் குறைந்தோர் விரும்பி உண்ணும் கிச்சடிச் சம்பா, சீரகச் சம்பா, அகிலம் போற்றும் ஆற்காடு கிச்சடி, நெல்லை மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பயிரிட்ட கொட்டாரஞ்சம்பா, நீரிழிவு நோய்க்கு மருந்தாகும்.

விளையும் தன்மை

ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா, கட்டைச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பாவும் இருந்தன. ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா, கார்த்திகைச் சம்பா இருந்தன. மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார், கருங்குறுவை, செங்குருவை, செங்கல்பட்டுச் சிறுமணி இருந்தன. ஈரக்கசிவிலேயே விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும், வெள்ளத்திற்கு மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் இருந்தன. அறுபது நாளில் விளையும் அறுபதாம் குருவை இருந்து. 70 நாளில் விளையும் பூங்கார் இருந்தது.

சில ரகமும் அதன் சிறப்பும்

கருப்பு அரிசி, சிவப்பரிசி, நீராகர ருசிக்காகப் பயிர் செய்யப்பட்ட சம்பா, மோசணம், குரங்கு பிடிப்பது போல மணி பிடித்த குரங்குச் சம்பா, மணம் கமழும் இலுப்பைப்பூச் சம்பா, புட்டு செய்வதற்கு ஏற்ற கவுணி, குமரி மாவட்ட மக்கள் விரும்பி உண்ணும் கட்டிச் சம்பா, இப்படி ஏராளமான நெல் ரகங்கள் இருந்தன.

அரிசி உணவு

அரசி உணவுவகைகள்  நமது வாழ்வில் முக்கிய உணவு அங்கமாக உள்ளது. அதில் மாவுப்பொருள், வைட்டமின், புரோட்டீன் இரும்பு, மெக்னீசியம் என பல சத்துபொருள் அடக்கம். ஆனால் அதையும் நவீன அறிவியல் காரணமாக தீட்டி பயன்படுத்துவதால் அதில் இருக்கும் அனைத்து சத்தையும் மருத்துவ குணங்களையும் இழந்து வெறும் சக்பையை சாப்பிடுகிறோம்....

தொடரும்......

Comments