நம் பாரம்பரிய நெல் ரகங்கள் பகுதி _ 8 புழுதி கார் நெல் Iyarkai Vivasayam

நம் பாரம்பரிய நெல் ரகங்கள்


பகுதி _ 8

புழுதி கார் நெல்

விளையும் பகுதி

புன்செய் நில நெல்
ஈரோடு மாவட்டத்திலுள்ள மேற்கு மலைத் தொடர்களில் அமைந்திருக்கும் மானாவாரி மற்றும் இறவை நில நிலைமைகளில் வளரும்.

விதைப்பு

நேரடி விதைப்புப் பயிர்.
பயிர் வளர்ச்சிக்காலம் 120 - 130 நாட்கள் மற்றும் நெல் பயிரின் சராசரி உயரம் 130 செ.மீ.
பயிர் சாய்தலுக்கு இலக்காகும் தன்மையுடையது.
ஒரு ஏக்கருக்கு 1.5 டன்கள் மகசூலை தரும்... நெல் தானியம் தடிப்பாகவும் சிவப்பு நிறத்துடனும் இருக்கும்..

************
கல்லுருண்டை

விளையும் பகுதி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையக் கூடியது...

பருவம்

பின்சம்பா (செப்டம்பர் 15 - பிப்ரவரி 14) மற்றும் நவரை (டிசம்பர் 15 -மார்ச் 14) ஆகியவை இந்த இரகத்திற்கு ஏற்ற பருவங்கள்... சிறப்பான வளர்ச்சிக்கு களிகலப்பு மண் ஏற்றது...

நாட்கள்

120 நாட்கள் வாழ்நாளைக் கொண்ட நேரடி விதைப்பு நெல்...
120 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது...
வறட்சி... பூச்சி... நோய்கள் மற்றும் உப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது...

நெல்லின் தன்மை

நெல் தானியமணி, மஞ்சள் நிறமுடன் அதில் கருப்பு நிற மங்கிய கோடுகளுடன் காணப்படும்...
நெல் மணி சற்று தடிப்பாகவும், வெளிறிய மஞ்சள் நிறமுடன் காணப்படும்...
இந்த இரக நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல், கூரை வேய்தலுக்குப் பயன்படுகின்றது...

தொடரும்....

Comments