சூரிய ஒளி மின் உற்பத்தி
இரண்டு வருடங்களுக்கு முன்னாள் தமிழக அரசு மின் கட்டணத்தை அதிகளவில் உயர்த்தியது, வீட்டிற்கு வழக்கமாக கட்டும் தொகையை விட பலமடங்கு அதிகம் வர துவங்கியது, இதை குறைக்கவேண்டும் என எண்ணி LED விளக்குகள் உள்ளிட்ட சில மின் சேமிப்பு முறைகளை செயல்படுத்தியும் , பெரிய அளவு சேமிக்க இயலவில்லை, இவ்வளவு யூனிட்கள்க்கு மேல் சென்றால் இந்த அளவில் கட்டண விகிதம் வரையறை செய்யப்பட்டிருப்பதால் மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம் என யோசித்தபோது நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பெயரில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் பொருட்டு அதன் கருவிகளை நிறுவினேன், அதை தொடர்ந்த மாதம் வந்த மின்கட்டணத்தை கண்டு மிகுந்த ஆச்சார்யமும் மகிழ்ச்சியையும் அடைந்தேன், வழக்கமாக கட்டும் தொகையில் 7 -8 சதவீதம் மட்டுமே கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது அதிகப்படியாக சென்ற வருடம் இதே மாதம் ரூ.7200 /- கட்டிய எனக்கு இப்பொழுது விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.520/-
சரி இதன் முதலீடு மற்றும் இயங்கும் முறையை பார்ப்போம், எனது இல்லத்தின் ஒரு வருட பயன்பாடு மற்றும் மின் சாதனங்களை கணக்கில் கொண்டு 2 கிலோ வாட் உற்பத்தி திறனில் மேல் மாடியில் உள்ள திறந்த வெளியில் அமைக்கப்பட்டது , இதற்கான இட தேவை 150 சதுர அடி, இந்த சூரியஒளி தகடுகளின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நேரடியாக மின் வாரியத்திற்கு வழக்கமான மின் இணைப்பின் வாயிலாக அனுப்பிவைக்கப்படுகிறது, நமது உபயோகத்திற்காக வழக்கமாக வரும் இணைப்பின் வாயிலாக எந்த மாற்றமும் இன்றி வருகிறது, இரு மாதங்களுக்கு ஒரு முறை நமது உபயோகம் மற்றும் நமது உற்பத்தியை கணக்கில் எடுத்து உபயோகம் செய்த யூனிட்டுகளை உற்பத்தி யூனிட்டுகளோடு நேர் செய்து உற்பத்தியை விட அதிகம் உபயோகத்திருந்தால் அந்த அதிகப்படியான யூனிட்டிற்கு மட்டும் கட்டணத்தை செலுத்த வேண்டும் உற்பத்தியை விட உபயோகம் குறைவாக இருந்தால் உங்கள் கணக்கில் யூனிட்கள் வரவு வைக்கப்பட்டு அடுத்த மாதத்திற்கான உபயோகத்தில் கழித்து கொள்ளப்படும். அதாவது 100 யூனிட் உற்பத்தி 110 யூனிட் உபயோகம் என்றால் 10 யூனிட்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் உற்பத்தி 100 யூனிட் உபயோகம் 90 யூனிட் என்றால் 10 யூனிட்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் அந்த மாதம் நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.
சரி மேலதிக விபரங்களை பார்ப்போம்
இந்த தகடுகள் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் சீனாவிலுருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
25 வருடம் வாரண்ட்டி உடன் நிர்மாணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தகடும் 6 x 4 என்ற அளவில் வரும்,
குறைந்த பட்சம் 1 கிலோவாட் நிறுவ வேண்டும் ,
வீட்டு பயன்பாடுகளுக்கு 10 கிலோவாட் வரை அனுமதி உண்டு,
மானியமாக நீங்கள் 1 கிலோவாட் அல்லது 10 கிலோவாட் வரை நிர்மாணித்தாலும் ரூபாய். 42 ,500 தரப்படுகிறது.
வேறு எந்த விதமான கட்டணம் மற்றும் பராமரிப்பு அல்லது சில வருடங்களில் மாற்ற வேண்டிய சாதனங்கள் என எதுவும் இல்லை.
இல்லங்களுக்கு அமைக்கப்படும் இந்த நிர்மாணம் வருடம் முழுவதும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்,
உங்களின் தற்போதய மின் இணைப்பில் எந்த பெரிய மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை, தற்போது இயங்கும் மின் மீட்டர் மட்டும் அரசின் மின்வாரியத்தில் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து உங்களின் அமைப்பு சோதிக்கப்பட்டு நெட் மீட்டர் என சொல்லப்படும் புதிய மீட்டர் பொருத்தப்படும், அதாவது உற்பத்தி மட்டும் உபயோகத்தை கணக்கிட.
ஒரு நாளைய 1 கிலோவாட் மின் உற்பத்தி 4 முதல் 4 .5 யூனிட்கள்.
ஒரு கிலோவாட் நிறுவ 100 சதுர அடி இடம் தேவைப்படும்.
ஒரு கிலோவாட் நிறுவ செலவழிக்க வேண்டிய தொகை ரூபாய் 1,09 ,000 .00 இதில் மானிய தொகை ரூபாய் கழித்தால் நீங்கள்…
Comments
Post a Comment