நம் பாரம்பரிய நெல் ரகங்கள் சூலை குறுவை இயற்கை விவசாயம்

நம் பாரம்பரிய நெல் ரகங்கள் சூலை குறுவை இயற்கை விவசாயம்


_____________
உழவு _ பகுதி _ 9

சூலை குறுவை





விளையும் பகுதி

நாகை மாவட்டத்திலுள்ள செம்பொடை... பெரிய குத்தகை... தொப்புதுரை... ஆகிய
பகுதிகளிலுள்ள கரையோர கிராமங்களில் விளையக் கூடிய ரகம்...

பருவம்

பின் சம்பா (செப்டம்பர் 15 - பிப்ரவரி 14) மற்றும் குறுவை (ஜூன் 1 -ஆகஸ்ட் 31) ஆகியவை சிறந்த பருவங்கள்...

மண் வகை

களி கலப்பு மண் மற்றும் கரையோர உப்பு
மண் இந்த இரகத்திற்கு மிகவும் ஏற்றது...

பாசனம்

பாசன முறை மற்றும் மானாவாரி நிலைகள் இரண்டிலும் வளரக் கூடியது...

காலம்

பயிர்க் காலம் 130 -140 நாட்கள் ஆகும்... மேலும் இவை 110 -120 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது...

தன்மை

நெல்மணி தடிப்புடனும்... வெளிறிய அழுக்கான பழுப்பு நிறத்துடனும் காணப்படும்...
ஏக்கருக்கு 15 பைகள் (75 கிலோ/சாக்கு) மகசூலைத் தருகிறது... அதாவது ஏக்கருக்கு  1125 கிலோ...

பிற பயன்பாடு

இதன் வைக்கோல் கால்நடைத் தீவனமாகவும், கூரை வேய்தலுக்கும் பயன்படுகின்றது...


குழி வெடிச்சான்

விளையும் பகுதி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் தாலுாக்காவில் வளரக் கூடியவை...

பருவம்

இந்த இரகம் விளைவதற்கு ஏற்ற பருவம் சம்பா (ஜூலை 15 -ஜனவரி 14) பருவமாகும்...

மண் வகை

மணல் கலந்த களிமண் மற்றும் உவர்ப்பு மண்ணில் நன்கு வளர்வதால் கடல் கரையோரப் பகுதிகளுக்கும் ஏற்ற இரகமாக விளங்குகிறது...
உப்புத் தன்மை... வறட்சி... பூச்சி மற்றும் நோய்கள்... ஆகியவற்றை எதிர்க்கும் திறன்கொண்டது...

காலம்

110 நாட்கள் வாழ்காலம் கொண்ட குறுகிய காலப் பயிர் வகையாகும்
ஏக்கருக்கு 950 கிலோ வரை மகசூலைத் தரும்.நெற்பயிரின் சராசரி உயரம் 2½ அடியாகும் எனவே பயிர் சாய்தலுக்கு இலக்காகும் தன்மையுடையது...

தன்மை

நெல்மணி தடிப்பாகவும், வெளிறிய அழுக்கான வெள்ளை நிறமுடனும் காணப்படும்...

பிற பயன்கள்

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை உண்டால்... பால் சுரப்பை அதிகப்படுத்துவது இந்த இரகத்தின் சிறப்பம்சமாகும்...

உழவு _ தொடரும்...

Comments