இயற்கை வழி கொசு ஒழிப்பு முறை
செய்முறை
தேவையான பொருட்கள்
1. தோல் சீவிய பூசனி பழம் _ 5 கிலோ
2. தோல் சீவிய விதை நீக்கிய கனிந்த நாட்டு பப்பாளி பழம் _ 5 கிலோ
3. கனிந்த நாட்டு வாழைப் பழம் _ 5 கிலோ
4. கருப்பட்டி பொடி அல்லது நாட்டு வெல்லம் _ 5 கிலோ
5. நாட்டு கோழி முட்டை _ நான்கு (4)
செய்முறை
இவைகள் அனைத்தும் சேர்ந்து 20 கிலோ பழத்தை 20 லிட்டர் போர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவேண்டும்... நன்றாக கையை வைத்து கலக்கவும், வேறு எந்த பொருளும் வைத்து கலக்கக்கூடாது...
இந்த கலவையுடன், 4 நாட்டு கோழி முட்டை உடைத்து லேசாக கலக்கவும்....
இந்த கலவையை காற்று புகா வண்ணம் 10 நாட்கள் நன்றாக மூடி வைக்க வேண்டும்.. 11 ம் நாள் நன்றாக குலுக்கி மேலும் 5 நாட்கள் மூடி வைக்கவும்,.. 16 ம் நாள் நன்றாக குலுக்கி மேலும் 5 நாட்கள் மூடி வைக்கவும்... 21ம் நாள் நன்றாக குலுக்கி மேலும் 5 நாட்கள் மூடி வைக்கவும். 26 ம் நாள், ஒரு வெள்ளை நுண்ணூயிரிகள் படிமம் தெரியும், ஒரு இனிப்பு வாசம் வரும். சுமார் 50 லிட்ட்டர் செரிவூட்டப்பட்ட நுண்ணூயிரிகள் (EM) தயார்...
கொசு தெளிப்பான்
செயல் முறை
தேவையான பொருட்கள்
1. EM _ 1 லிட்டர்
2. போர் தண்ணீர் _ 17 லிட்டர்
3. கருப்பட்டி பொடி _ 2 கிலோ
செய்முறை
மூன்றையும் கலந்து 20 லிட்டர் தண்ணீர் கேனில் ஊற்றி காற்று புகா வண்ணம் 3 நாட்கள் நன்றாக மூடி வைக்கவும், 4, 5, 6, 7 மற்றும் 8 ம் நாள் நன்றாக குலுக்கி மூடி வைக்கவும்... 9 ம் நாள்
சுமார் 20 லிட்டர் கரைசல் தயார் ஆகிவிடும்...
100 லிட்டர் கரைசலை கலந்து பயன்படுத்துவது சிரமம் எனில்.... 50 ml கலவையில் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து பயன்படுத்தலாம்... கொசு உருவாகும் இடங்கள் எல்லாம் கைகளாலேயே தெளித்துவிடலாம்... இதனால் கொசு மூட்டைகள் அழிக்கப்படும்...
தெளிக்கும் காலம்
தொடர்ச்சியாக 10 நாட்கள் தெளித்து விட்டு பின்பு ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற முறையில் மொத்தம் 30 நாட்கள் தெளித்தால் கொசு கட்டுப்படும்...
கலக்கும் வீதம்
இந்த 20 லிட்டர் கரைசலிலிருந்து... 1 லிட்ட்டர் எடுத்து 100 லிட்ட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்...
இதுதான்
கொசு மற்றும் பூச்சு விரட்டி கரைசல்
தெளிக்கும் இடங்கள்
தினமும் வீட்டில் தண்ணீர் தேங்கும் இடம், மற்றும் வீட்டின் அறைகள், குளியலறை, கழிவறை ஆகிய இடங்களில் தெளிக்கலாம்..
நன்மைகள்
இதனால் பூரான், பூச்சி, கொசு ஆகியவை வராது... இந்த கரைசல் முற்றிலும் பாதுகாப்பானது, எந்தவித நோய் தொற்றும் வராது...
ஏர்வளம்
Comments
Post a Comment