Iyarkai Vivasayam Ep 04
இழந்துவிட்ட, இழந்துகொண்டிருக்கும் இயற்கை வளங்களை மட்டுமல்ல, பசுமை புரட்சியால் தொலைத்த நமது பாரம்பரிய, மரபு வழி விவசாய வழிமுறைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை தொடர்ந்து நமது வெற்றி அமைப்பு முன்னெடுத்துவருகிறது. அந்த வகையில் எதிர்வரும் செப்டம்பர் 16 ,2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 .00 மணியளவில் திருப்பூர் காலேஜ் ரோட்டிலுள்ள சமுத்திர ஹாலில் *#ஆதி_தமிழன்_இயற்கை_விவசாயம்* என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் கிழ்கண்ட இருவர் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை பகிரவுள்ளனர்.
1 . கோவை சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆய்வு மையத்தின் (SACON) விஞ்ஞானி *முனைவர் திரு.பிரமோத், அவர்கள் பல்லுயிர் சுழற்சி வட்டத்தில் பறவைகளின் பங்கு* என்ற தலைப்பிலும்,
2 . நமது நாட்டில் விவசாயமே இனி செய்ய இயலாது என்ற நிலையை கண்டு பாரம்பரிய விவசாய முறைகளை மீட்டெடுத்து அவற்றை உலகெங்கும் சென்று பரப்புவதோடு மட்டுமல்லாது இது வரை 11 லட்சம் விவசாயிகள் இழந்த புன்னகையை மீட்டெடுத்த சாதனையாளர், தமிழ் கூறும் நல்லுலகிற்கு இயற்கை தாய் அளித்த கொடை *INSPIRE திருமதி. ரேவதி அவர்கள் மழையில்லாமல் விவசாயம் செய்வது எப்படி* என்ற தலைப்பில் தனது கருத்துக்களை பகிரவுள்ளார். இவர் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பரமபரிய விவசாய முயற்சிகளை முன்னெடுத்துள்ளார் தொடர்ந்து அந்த பணியில் அயராது பணியாற்றிவருவதும், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற உலகளாவிய கல்வி நிறுவனங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். ஆழிப்பேரலையில் சிக்கிய கடலூர் மாவட்டத்தில் ஆக சிறந்த பணிகளை தனது மேற்பார்வையில் செய்து இன்று பல ஆயிரம் விவசாயிகளின் குடும்பத்தில் ஒளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளது தேதியில் பாரம்பரிய மரபு வழி விவசாயம் மற்றும் இயற்கை வள மீட்டெடுப்பில் பெரும் கவனமும் செயல்பாடுகளும் முன்னெடுக்கவேண்டிய கட்டாய நிலையில் உள்ளது நமது சமூகம் எனவே இந்த அறிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதி இலவசம்,
Comments
Post a Comment