மூலிகை முற்றம் தொகுப்பு _1 நம் பாரம்பரிய மூலிகைகள்

மூலிகை முற்றம்
( நம் பாரம்பரிய மூலிகைகள் )
____________

தொகுப்பு _1


மூலிகைகள் பயன்பாடு
கிமு. 3000 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது.. கிமு.1500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஈபெர்ஸ் பெபைரசு என்ற நூல் தான் மிக மிக பழமையான மூலிகை மருத்துவ நூல்.. இந்த நூல் ஆமணக்கு மற்றும் பூண்டு
மூலிகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது..

மூலிகை தாவரங்களில் உள்ள முக்கிய வேதிப்பொருட்கள்

1. ஆல்கலாய்டுகள்
2. ஆன்த்திரா குயினென்கள்
3. கசப்புகள்
4. கௌமெரின்கள்
5. ஃபிலேவனாய்டுகள்
6. குளுக்கோ சிலினேட்டுகள்
7. குளுக்கோ சைடுகள்
8. கனிமங்கள்
9. புரோ அந்தோசயானின்கள்
10. ஃபினால்கள்
11. பாலி சாக்ரைடுகள்
12. சபோனின்கள்
13. டேனின்கள்
14. வோலடைல் எண்ணெய்கள்
15. விட்டமின்கள்

இவைகள் மூலிகைகளில் இருக்கும் அடிப்படையான வேதி பொருட்கள்...
இவைகள் நம் உடலுக்கு தேவையான மருந்தாக... சத்தாக... 12 வகைகளில் தயார் செய்யப்படுகிறது...

அவைகள் :

1. வடிசாற்று தேரல்
2. வடிநீர் _ கசாயம்
3. சாராய கரைசல்
4. மருந்துறை மற்றும் பொடிகள்
5. மருந்து நெய்
6. மூலிகை எண்ணெய்கள்
  அ. வெப்ப வடி எண்ணெய்
  ஆ. குளிர் வடி எண்ணெய்
7. சத்து மது மருந்து
8. பதவாடை / பற்று
9. பாகுநீர்
10. களிம்பு
11. தொண்டை மற்றும் வாய் கழுவு நீர்
12. சாறு

மூலிகை முற்றம் தொடரும்...

Comments